அஜித்தின் வலிமை பான் இந்தியா படம் ! ’’தல’’ரசிகர்கள் கொண்டாட்டம் !

புதன், 29 ஜூலை 2020 (20:45 IST)
சமீபத்தில் அஜித் சினிமாவில் அடியெடுத்து வைத்து 28 வருடங்கள் ஆனதை ஒட்டி அவரது ரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அஜித்தின் வலிமை படம் பான் இந்தியா படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. இப்படத்தை மறைந்த ஸ்ரீதேவின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் பாதி முடிந்துள்ள நிலையில், கொரொனாவால் சூட்டிங் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தை ஹிந்தியில் டப் செய்யப்பட்டு, தென்னிந்திய  மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிட போனி கபூர் முடிவுசெய்துள்ளதாகவும், இப்படத்தில் அஜித்தின் மாஸிற்கேற்ப சண்டைக் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தல ரசிகர்களை இனி கையில் பிடிக்கமுடியாது. இப்போதே வலிமை எப்போது ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்