அஜித், விஜய் ரசிகர்களுக்கு கஸ்தூரியின் அறிவுரை

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (22:30 IST)
இன்று காலை முதல் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் டுவிட்டர் இணையதளத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதை கண்டு கோலிவுட் திரையுலகமே அதிர்ந்தது. பல கோலிவுட் நட்சத்திரங்கள் இதுகுறித்து தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வந்தனர். ஒரு அபிமான நடிகரின் மீது அன்பு வைத்திருக்கலாம், ஆனால் வெறித்தனமான அன்பு வைத்திருப்பதால் எதிர் தரப்பினர்களுக்கு பாடை கட்டும் அளவுக்கு அநாகரீகம் உச்சத்திற்கு சென்றது இன்றுதான்
 
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி அஜித், விஜய் ரசிகர்களுக்கு சற்றுமுன் தனது டுவிட்டரில் அறிவுரை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: நெகடிவ் விஷயங்களுக்கு இவ்வளவு மெனக்கெடும்  தல அஜித், தளபதி விஜய்  ரசிகர்கள் அந்த நேரத்தையும் முயற்சியையும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினால் ஊர் உங்களையும் வாழ்த்தும், உங்கள் அபிமான நட்சத்திரத்தையும் வாழ்த்தும் என்று கூறியுள்ளார். 
 
ஆனால் வழக்கம்போல் அறிவுரை யார் சொன்னாலும் அவர்களையும் போட்டு தாக்கும் அஜித், விஜய் ரசிகர்கள் இந்த அறிவுரையை சொன்ன கஸ்தூரியையும் சரமாரியாக தாக்கி வருகின்றனர். சமூக வலைத்தளம் என்ற பயங்கரமான ஆயுதத்தை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தினால், அஜித், விஜய் ரசிகர்களை உலகமே உற்று நோக்கும் என்பதை புரிந்து கொள்ளும் நாள் என்று வருமோ? என்பதுதான் அனைவரின் கவலையாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்