அண்ணனா பொறந்திட்டு பட்ற பாடு இருக்கே- சூர்யா டுவீட்

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (18:58 IST)
நடிகர் சூர்யாவின் 25 ஆண்டுகள் சினிமா பயணத்தைக் குறிப்பிட்டு, அவரது தம்பி கார்த்தி வாழ்த்துகளும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

கடந்த 1997ஆம் ஆண்டு விஜய் நடித்த நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் சூர்யா. இந்த படம் 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன.

இதனை அடுத்து சூர்யா 25 என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் , நடிகர் சூர்யாவின் 25 ஆண்டுகள் சினிமா பயணத்தைக் குறிப்பிட்டு, அவரது தம்பி கார்த்தி,

''அவர் இரவும் பகலு உழைத்து தன் மைனஸ்களையே பிளஸாக்கிக் கொண்டார்.  அவர் சாதிப்பதையே தன் லட்சியமாக்கிக் கொண்டார். அவர் ஆயிரக்கணக்கானன் குழந்தைகளின் மனதில் இடம்பிடித்துள்ளார். அவர் என் சகோதர்'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு சூர்யா, தனது டுவிட்டர் பக்கத்தில், ''வந்தியத் தேவா, அண்னானா பொறந்திட்டு, பட்ற பாடு இருக்கே'' என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்