கார்த்திக் சுப்பாராஜுக்கு அதிகாரப்பூர்வ தடை கிடையாது

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (17:39 IST)
இறைவி பிரச்சனையில் கார்த்திக் சுப்பாராஜுக்கு படம் இயக்க தடை விதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்தாலும், அதிகாரப்பூர்வமாக அப்படியொரு முடிவை தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை எடுக்கவில்லை.


 
 
அவசரமாக கூட்டப்பட்ட அச்சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் பலரும் கார்த்திக் சுப்பாராஜுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டனர்.
 
இறைவி படத்தின் கதை சி.வி.குமார், ஞானவேல்ராஜா இருவருக்கும் முன்பே தொரிந்திருக்கும், அதனால் அவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று ஒருசிலர் கருத்து கூறினர். இறுதியில், இது தொடர்பாக இயக்குனர்கள் சங்கத்துக்கு கார்த்திக் சுப்பாராஜ் குறித்து புகார் அளிப்பது என்றும், அதற்கு இயக்குனர்கள் சங்கம் எடுக்கும் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுத்துள்ளனர். அதுவரை கார்த்திக் சுப்பாராஜுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளனர். ஆனால், பல காரணங்களால் ஒத்துழைப்பு இல்லை என்பதை தயாரிப்பாளர்கள் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேபோல் கார்த்திக் சுப்பாராஜையும் இந்த புகார் தொடர்பாக யாரும் அணுகவில்லை என்பது முக்கியமானது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்