கபாலி இசை வெளியீட்டு விழா ரத்து...?

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (15:58 IST)
கபாலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க வாய்ப்பில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் கூறியுள்ளன.


 
 
ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கபாலி படத்தின் பாடல்களை கேட்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர். 
 
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் கபாலி பாடல்களை ஜுன் 12 -ஆம் தேதி வெளியிடப் போவதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கபாலி பாடல்கள் வெளியீட்டு விழாவில், ரசிகர்களின் கேள்விகளுக்கு ரஜினி பதிலளிப்பது போல் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவும் படக்குழு திட்டமிட்டிருந்தது.
 
இந்நிலையில், அமெரிக்காவில் குடும்பத்துடன் விடுமுறையில் இருக்கும் ரஜினி ஜுன் 12 -ஆம் தேதிக்கு முன் நாடு திரும்ப மாட்டார் என்பதால் கபாலி பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்தாமல் நேரடியாக பாடல் சிடியை கடைகளில் விற்பனை செய்வது என்று தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருப்பதாக ஒருசாரர் கூறுகின்றனர்.
 
தாணு விரைவில் இது பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்