பாலகிருஷ்ணாவின் ‘அகாண்டா 2’வின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (10:20 IST)
தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை. இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்த அகாண்டா திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கலக்கியது. இந்த படத்தைப் போயப்பட்டி சீனு இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து இதே கூட்டணியில் அகாண்டா பார்ட் 2 உருவாக உள்ளதாக 2022 ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியானது. அதையடுத்து தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 25 ஆம் தேதி தசரா பண்டிகையை ஒட்டி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தால் திடீரென ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில் இப்போது ஜனவரி 14 ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிசர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை எகிறவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்