கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்குரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (18:01 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மெர்குரி’ படம், ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்குரி’. பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், சைலண்ட் த்ரில்லர் படமாகும். அதாவது, இந்தப் படத்தில் வசனங்களே இல்லாமல், பின்னணி இசை மூலம் மட்டுமே உணர்ந்து கொள்ளும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படம், ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்