இளையராஜாவிடம் ஆசி பெற்ற கார்த்திக் ராஜா

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (14:04 IST)
சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் துவக்க விழாவிற்கு முன்பாக இளையராஜா வீட்டிற்கு சென்று அவரிடம் கார்த்திக் ராஜா ஆசி பெற்றார். இந்த படத்தை படத்தின் சிவபாலன் இயக்குகிறார். வேல் ஒளிப்பதிவு செய்கிறார். சிதம்பரம் ரயில்வே கேட் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.
 
1980ல் நடந்த உண்மை சம்பவத்தை மையக்கருவாக வைத்து இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார் இயக்குனர் சிவபாலன். உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள், இவர்களுக்குள் ஏற்படும் பகை, காதல் ஆகியவற்றை மிக எதார்த்தமாக பேச இருக்கிறது சிதம்பரம் ரயில்வே கேட். 
 
1980களைப்போல சிதம்பரம் நகரம் மோகன் ஸ்டூடியோவில் செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, ஏகாந்தம் படத்தில் நடித்த நீரஜா, காயத்ரி, ரேகா, சூப்பர் சுப்புராயன், பாலா சரவணனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
 
இசை கார்த்திக்ராஜா, ஒளிப்பதிவு ஆர்.வேலு, சண்டை சூப்பர் சுப்புராயன், பாடல்கள் பிரியன், அருண் பாரதி, தயாரிப்பு மேற்பார்வை சுசி காமராஜ். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்