அப்போது தளபதி படத்தில் ’சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ எனும் பாடலைப் பாடி முடித்ததும், அப்பாடல் பற்றிப் பேசினார். ’இந்த பாடலில் வரிகள் யாவும் மிகவும் சாதாரணமானவை. எந்த கவியரங்கத்தில் வாசித்தாலும் இவை சிறப்பானக் கருத்தையோ உணர்வையோ தூண்டாது.ஆனால் பாடலாசிரியர் வாலி அவர்கள் அவற்றை சிறப்பான இசையின் மீது வைத்ததால்தான் அவை காலத்தால் அழியாத இடத்தைப் பிடித்துள்ளன.’ எனக் கூறினார்.
இதே போல கண்ணதாசன் பாடல் ஒன்றையும் குறிப்பிட்டு எம் எஸ் வி யின் இசையால்தான் இந்த பாடல் சிறந்து விளங்குகிறது என்று கூறினார்.