ப்ராஜக்ட் அக்னியைப் படமாக்குகிறாரா கார்த்திக் நரேன்?

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (17:00 IST)
கார்த்திக் நரேன் நவரசா ஆந்தாலஜியில் ப்ராஜக்ட் அக்னி என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார்.

நவரசா ஆந்தாலஜி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதில் இயக்குனர் வசந்த் இயக்கிய பாயசம் படம் மட்டுமே எந்த எதிர்மறை விமர்சனங்களையும் சந்திக்கவில்லை. மற்ற எல்லா படங்களையும் கழுவி ஊற்றுபவர்களும் இருக்கிறார்கள். பாராட்டுபவர்களும் இருக்கிறார்.

இந்நிலையில் அற்புதம் என்ற ரசத்தில் பிராஜக்ட் அக்னி என்ற அறிவியல் புனைவுக் கதையை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இந்த கதையைப் பற்றி பேசியுள்ள கார்த்திக் ‘பிராஜக்ட் அக்னியை பாராட்டியுள்ள அனைத்து ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி. விஷ்ணு, கிருஷ்ணா மற்றும் கல்கி ஆகியோரின் பயணம் இப்போதுதான் தொடங்குகிறது’ என்று கூறியுள்ளதால் இதை முழு திரைப்படமாக எடுப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்