சமீபத்தில் சத்யராஜுடன் நேர்க்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் கூலி. இந்த படம் பெரும் ஹிட் அடித்துள்ள நிலையில் சமீபத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஒரு விவாத நிகழ்ச்சியில் பேசினார்கள்.
அப்போது உங்க அப்பா கமல்ஹாசன் எந்த மொழியாக இருந்தாலும் ஈஸியா கத்துக்குவார். அந்த ஜீன் உங்களுக்கும் இருக்கு என சத்யராஜ் பேசினார்.
அதற்கு பதில் பேசிய ஸ்ருதி ஹாசன் “அப்படின்னு இல்லை. நான் கத்துக்கணும்னு நினைச்சதால கத்துக்கிட்டேன். அப்பாவே முதல்ல எதுக்கு பெங்காலி கத்துக்கிட்டார் தெரியுமா? அவருக்கு பெங்காலி நடிகை அபர்ணா சென் மேல லவ். அதுனால பெங்காலி கத்துக்கிட்டார். அதுனாலதான் ஹேராம் படத்துல ராணி முகர்ஜி கேரக்டர் பேரை அபர்ணானு வெச்சார்” என ஓப்பனாக பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வரும் நிலையில், அப்பா லவ் ஸ்டோரிய இப்படி புட்டு புட்டு வெச்சிட்டியேம்மா என பலரும் ஸ்ருதிஹாசனின் பேச்சை ஷேர் செய்து வருகின்றனர்.
Edit by Prasanth.K