கோவாவில் ஜெயிலர் 2 படத்தின் க்ளைமேக்ஸ்… பிரம்மாண்டமாக உருவாகும் அரங்கம்!

vinoth

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (11:09 IST)
தன்னுடைய 74 ஆவது வயதிலும் தனது அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

அதன் காரணமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் ‘கூலி’ படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக ஒரு இடைவெளி விடப்பட்டிருந்தது. விரைவில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. ஜெயிலர் 2 படத்தின் முக்கியமானக் காட்சிகளைப் படமாக்க படக்குழு கோவாவில் ஒரு பிரம்மாண்டமான செட்டை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த செட் அமைக்கும் பணிகள் மட்டும் ஒன்றரை மாதங்கள் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. நவம்பரில் அந்த செட்டில் முக்கியமானக் காட்சிகளைப் படமாக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தக் காட்சிகள்தான் படத்தின் க்ளைமேக்ஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்