74 வயதிலும் தனது அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இணையாக சுறுசுறுப்பாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் நடிகர். அவர், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்த கூலி திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களையும், நல்ல வசூலையும் பெற்றது.
அதன் இறுதிப் பட்டியலில் இயக்குனர்கள் ஹெச் வினோத் ,விவேக் ஆத்ரேயா மற்றும் நித்திலன் சுவாமிநாதன் ஆகியோர் உள்ளதாக சொல்லபப்ட்டது. இந்நிலையில் தற்போது நடிகையர் திலகம் மற்றும் கல்கி ஆகிய படங்களை இயக்கிய நாக் அஸ்வின் ரஜினியை சந்தித்துக் கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சொன்ன கதை ரஜினிக்குப் பிடித்துள்ளதாகவும் அதனால் முழு திரைக்கதையோடு வருமாறு கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.