தமிழகத்தில் பிக் பாஸ் ஒன்பதாவது சீசன் அண்மையில் தொடங்கியுள்ள நிலையில், தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வரும் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட்டை இழுத்து மூட மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது, கன்னட ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக் பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கன்னட பிக் பாஸ் செட்டில், கழிவு நீர் அகற்றல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதிமீறல்கள் நடந்திருப்பதாகக் கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், சுற்றுச்சூழல் விதிகளை சரியாக பின்பற்றாத காரணத்தாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாரியத்தின் தலைவர் நரேந்திர சுவாமி உறுதிப்படுத்தியுள்ளார்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த உத்தரவால், கன்னட பிக் பாஸ் சீசன் 12 பாதியிலேயே முடிவுக்கு வருமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதுடன், இந்த விவகாரம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.