அந்த பாடல் எங்களோட பாட்டின் காப்பி… காந்தாரா படத்தின் மீது எழுந்த குற்றச்சாட்டு

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (14:37 IST)
கன்னட சினிமாவில் உருவாகி இன்று இந்தியா முழுவதும் பல மொழிகளில் டப் ஆகி வெளியாகி வரும் காந்தாரா திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலில் இணைந்துள்ளது. கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் குவித்து வருகிறது.

இந்நிலையில் இப்போது ஐஎம்டிபி ரேட்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 9.5 மதிப்பெண்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் ஜெய்பீம் திரைப்படம் 8.9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், KGF 2 திரைப்படம் 8.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இதற்கிடையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வராகரூபம் என்ற பாடல் கேரளாவின் இசைக்குழுவான தைக்குடம் பிரிட்ஜ் ஆல்பம் பாடலான நவரசம் பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்