நடிகை கனிகா இப்போது தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.
நடிகை கனிகா தமிழில் எதிரி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆனால் தமிழ் சினிமாவை விட மலையாளப் படங்களிலேயே அதிகமாக நடித்தார். ஒரு கட்டத்தில் அவர் தனக்கான வாய்ப்புகளை இழந்த நிலையில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார்.
அதையடுத்து மீண்டும் நடிப்புக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ள கனிகா எதிர்நீச்சல் என்ற தொடரில் நடித்து வருகிறார். ஆனால் சமூகவலைதளங்களில் அவர் மாடர்ன் உடையில் வெளியிடும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.