அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

ஞாயிறு, 27 நவம்பர் 2022 (08:45 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு மழை பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி ராமநாதபுரம் தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் புழல் ஏரிக்கு நீர்வரத்து 102 கனஅடியாக உள்ளது என்றும், ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 186 கனஅடியில் இருந்து 160 கனஅடியாக சரிந்துள்ளதாகவும், ஏரியில் நீர்இருப்பு 497 மில்லியன் கனஅடியாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்