கல்கி படத்தில் நடிக்க முதலில் யோசித்தேன்… கமல் பகிர்ந்த தகவல்!

vinoth
வெள்ளி, 28 ஜூன் 2024 (07:00 IST)
பாகுபலி 2 க்குப் பின் பிரபாஸ் நடித்த எந்த திரைப்படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. வரிசையாக ப்ளாப் ஆகின. இந்நிலையில் இப்போது அவர் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 AD என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தவிர அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் இன்று உலகமெங்கும் ரிலீஸாகிறது. படத்தின் டிரைலர்கள் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளன. இந்நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள கமல்ஹாசன் “இந்த படத்தில் நடிக்க நான் முதலில் தயங்கினேன். அமிதாப் பச்சன், பிரபாஸ் எல்லாம் இருக்கிறார்கள். இந்த படத்தில் நான் என்ன செய்யப் போகிறேன் என யோசித்தேன். இதற்கு முன்னர் நான் கெட்டவனாகவோ, சைக்கோவாக நடித்திருக்கிறேன். ஆனால் கல்கி படத்தில் இருக்கும் கதாபாத்திரம் வேறு மாதிரியானது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்