அடுத்த ஆண்டு இதனை இரட்டிப்பாக்குவோம்: தேசிய விருது குறித்து கமல் டுவீட்

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (22:27 IST)
67 வது தேசிய விருதுகள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தனுஷ் உள்பட பல தமிழக கலைஞர்கள் தேசிய விருதை பெற்றனர் என்பதை பார்த்தோம் 
 
அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது தனுஷுக்கும் சிறந்த இயக்குனர் விருது வெற்றிமாறனுக்கும் கிடைத்தது விஸ்வாசம் படத்திற்காக டி இமானுக்கும், ஒத்த செருப்பு படத்திற்கு 2 விருதுகள் கிடைத்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் மொத்தம் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசன் அவர்கள் விருதுகள் பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த ட்விட்டில் அவர் கூறியிருப்பதாவது :
 
7 தேசிய விருதுகள் தமிழ்த் திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களுக்கும், அவர்தம் அணியினருக்கும் என் மனமார்ந்த  வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு இதனை இரட்டிப்பாக்குவோம். வெல்க தமிழ் சினிமா!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்