கமல் முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி 2 வா? அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (12:24 IST)
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துப்பாக்கி.

முருகதாஸ் விஜய் வெற்றிக் கூட்டணியின் தொடக்கமாக அமைந்த திரைப்படம் துப்பாக்கி. அந்த படம்தான் விஜய் நடிப்பில் வெளியாகி முதல் முதலில் 100 கோடி வசூல் செய்த படம். அதன் பின்னர் அவர்கள் கூட்டணியில் கத்தி மற்றும் சர்கார் ஆகிய படங்கள் வெளியாகின.

ஆனால் இப்போது விஜய் இல்லாமல் முருகதாஸ் துப்பாக்கி 2 படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என்பது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இருதரப்பில் இருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்