நடிகை ஆர்டர் செய்த சாப்பாட்டில் கரப்பான் பூச்சி… ஸ்விக்கி நிறுவனம் மேல் புகார்!

வியாழன், 24 ஜூன் 2021 (09:05 IST)
நடிகை நிவேதா பெத்துராஜ் ஸ்விக்கி நிறுவனம் மூலமாக ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியாகியுள்ளார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து, சங்க தமிழன், டிக் டிக் டிக் போன்ற படங்களின் மூலமாக பிரபலமானவர். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

ஸ்விக்கி நிறுவனம் மூலமாக அவர் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இது முதல் முறையில்லையாம் ஏற்கனவே இதுபோல ஒருமுறை நடந்துள்ளதாம். இந்நிலையில் உணவை டெலிவரி செய்த ஸ்விக்கி நிறுவனத்திடம் உங்கள் சேவையில் தரமான உணவகங்களை இணைக்கவேண்டும் எனவும் கடுப்படித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்