இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதையடுத்து படத்துக்காக வித்தியாசமான முறையில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கேரளாவில் இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் வரும் மே 27 ஆம் தேதி கொச்சியில் உள்ள லூலூ மாலில் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை கமல் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது இயக்குனர் லோகேஷ் கனகராஜும் உடன் செல்ல உள்ளார். இதை கேரளாவில் படத்தை வெளியிடும் ஷிபு தமீம்ஸ் அறிவித்துள்ளார்.