கேரளாவில் ஆட்சியை தக்கவைத்து இரண்டாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள பினராயி விஜயன், இந்தியாவில் இடதுசாரிகள் ஆளும் ஒரே மாநிலமாக கேரளாவை தக்கவைத்துள்ளார். இந்நிலையில் இன்று அவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை அரசியல்வாதிகளும், அவரின் நண்பர்களும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய டிவீட்டில் “மார்க்சிஸத்தின் தலை மாணாக்கர், அனைவர் நலனையும் அவாவுபவர், கேரள முதல்வர், வயதுக்கு மரியாதையைக் கூட்டுபவர், என் இனிய நண்பர் பினராயி விஜயன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து.” எனக் கூறியுள்ளார்.