மத்திய அரசின் நாடகம் தான் எரிவாயு சிலிண்டர் மானியம்: மக்கள் நீதி மய்யம்!

திங்கள், 23 மே 2022 (17:24 IST)
மத்திய அரசின் நாடகம்தான் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது 
 
சமீபத்தில் மத்திய அரசு எரிவாயு சிலிண்டருக்கான மானியம் 200 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. ஆனால் இந்த மானியம் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு மட்டும் என்று கூறப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்துக்கு மட்டுமின்றி அனைத்து குடும்பங்களுக்கும் சிலிண்டர் விலையை குறைத்தால் தான் நிம்மதியாக சமைக்க முடியும் என்றும் எரிபொருள் விலையை குறைக்காவிட்டால் பணவீக்கம் விலைவாசி உயர்வை மத்திய அரசு நாடகம் அரங்கேற்றுவது ஆகவே எண்ணத்தோன்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்