கும்கி படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபுவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்கள் அமையவில்லை. அந்த குறையைப் போக்கும் விதமாக சமீபத்தில் அவர் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியான டாணாக்காரன் திரைப்படம் போக்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் பிரபுவுக்கு ஒரு ஹிட் படமாக அமைந்து, விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைக் குவித்தது.