40 ஆண்டுகளுக்கு பின் ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படம்: இயக்குனர் யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (08:26 IST)
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பார்கள் என்று கூறப்படும் நிலையில் தற்போது சினிமாவிலும் இணைய உள்ளதாக ஒரு செய்தி பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றது 
 
ரஜினிகாந்த் நடிக்க உள்ள ’தலைவர் 169’ என்ற படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை தற்போது விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
கமல் ரஜினி ஆகிய இருவரும் கடந்த 1979 ஆம் ஆண்டு வெளிவந்த ’நினைத்தாலே இனிக்கும்’ என்ற படத்தில்தான் கடைசியில் இணைந்து நடித்தனர். தற்போது 41 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்