ரஜினி நியாயவாதி... அவர் பேச்சில் தப்பில்ல: சப்போர்ட்டுக்கு வந்த அதிமுக அமைச்சர்!

வியாழன், 23 ஜனவரி 2020 (19:03 IST)
ஆன்மீகத்தை பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறு இல்லை என அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 
 
கடந்த 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன், சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளியானது.      
 
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. கேள்விப்பட்டது பத்திரிகைகளில் வந்தைத்தான் கூறினேன். இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார்.   
ரஜினியின் இந்த கருத்துக்கு விமர்சனங்களும் ஆதரவுகளும் கலவையாகவே கிடைத்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரஜினி குறித்த கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, 
 
பெரியாரைப் போன்றோர் இல்லையென்றால் நான் அமைச்சராகி இருக்க முடியாது. ஆன்மீகத்தை பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறு இல்லை. ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதை பேசுபவர். 
 
திமுகவின் முகமூடிதான் திக. திக-வினர் ரஜினியை மிரட்டி பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது. ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை, தமிழச்சியை திருமணம் செய்த ஒரு மனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது என ரஜினிக்கு ஆதரவாக பேசியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்