பிக்பாஸில் இந்த வாரம் கமல் அறிமுகப்படுத்திய புத்தகம்!

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (11:00 IST)
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தொடரில் வாரம்தோறும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் என ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 4 இப்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களில் தோன்றும் கமல் தனது தனித்தன்மையான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நான்காவது சீசன் முழுக்க தான் தோன்றும் எபிஸோட்களில் எல்லாம் படிக்கவேண்டிய ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்யப்போவதாக கூறியிருந்தார்.

அந்த வகையில் பிளேக், வென்முரசு, புயலிலே ஒரு தோனி ஆகிய புத்தகங்களை அவர் இதற்கு முன்னர் அறிமுகம் செய்தார். அதையடுத்து இந்த வாரம் எழுத்தாளர் தொ பரமசிவன் எழுதிய அழகர் கோயில் என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் பேராசிரியர் பரமசிவன் அவர்களையும் வீடியோ மூலமாக பேசவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்