ஸ்ருதி போனா வேற ஆளே இல்லையா: தயாரிப்பு நிறுவனம் காட்டம்!!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (12:29 IST)
சுந்தர்.சி-யின் கனவு படமான சங்கமித்ராவை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா போன்ற நடிகர்கள் கமிட்டாகியுள்ளனர்.


 
 
இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் படத்தில் இருந்து விலகினார். ஆனால், படக்குழுவோ ஸ்ருதி விலகவில்லை அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என கூறியது. ஸ்ருதி விலகப்பட்டதற்கான காரணம் நாகரிகம் கருதி வெளியிட முடியாது  எனவும் படக்குழு அறிவித்தது.
 
எனவே, படத்தின் ஹீரோயின் வேட்டை நடைபெற்று வருகிறது. அனுஷ்கா மற்றும் நயன்தாராவிடம் பேசி பார்க்க படக்குழு முடிவு செய்து அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதனை பற்றிய தகவல் இன்னும் எதும் வெளியாகவில்லை.
 
சுந்தர்.சி சிபாரிசு செய்த நடிகை ஹன்சிகாவை தயாரிப்பு நிறுவனம் நிராகரித்தது. இந்நிலையில், படத்தில் நடிக்க யாரும் தயாரக இல்லை எனவும் படம் கிடப்பில் போடப்பட்டதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
 
எனவே, ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸின் சிஇஓ இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், படத்திற்கு வேறு ஒரு நடிகையை தேர்வு செய்துவிட்டோம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்