கமல்ஹாசன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய ஷாருக் கான்

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (11:30 IST)
கமல்ஹாசன் இயக்கி, நடித்த ‘ஹேராம்’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் ஷாருக் கான். 
கமல்ஹாசன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஷாருக் கான், ராணி முகர்ஜி, ஹேமாமாலினி, அதுல் குல்கர்னி, அப்பாஸ், நாசர், நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பலர்  நடிப்பில் ரிலீஸான படம் ‘ஹேராம்’. தமிழ் மற்றும் ஹிந்தியில் ரிலீஸான இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்தார்.  2000ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது.
இந்தப் படத்தை கமல்ஹாசனே தயாரித்தார். சமீபத்தில் மும்பையில் கமல்ஹாசனும், ஷாருக் கானும் சந்தித்துக் கொண்டனர். அப்போது, ‘ஹேராம்’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையைத் தரும்படி ஷாருக் கான் கேட்டதாகவும், கமல்ஹாசன் அதற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்