ஷாருக் கானைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ராவும்…

புதன், 6 செப்டம்பர் 2017 (14:49 IST)
பழம்பெரும் நடிகர் திலீப் குமாரைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா.

 
 
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான திலீப் குமார், உடல்நலக் குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார். நிறைய பிரபலங்கள் அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். ஆனால், சிலர்  ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால், தற்போது வீடு திரும்பியுள்ள அவரைச் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
 
சில நாட்களுக்கு முன்பு ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக் கான் நேரில் சென்று நலம் விசாரித்தார். தற்போது, பாலிவுட் மற்றும்  ஹாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்