திலீப் குமாரை நலம் விசாரித்த ஷாருக் கான்

புதன், 16 ஆகஸ்ட் 2017 (20:54 IST)
பாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த திலீப் குமாரை நலம் விசாரித்திருக்கிறார் ஷாருக் கான்.


 
 
பாலிவுட்டில் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளராகத் திகழ்ந்தவர் திலீப் குமார். 94 வயதான இவர், சமீபத்தில் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
சிகிச்சை முடிந்த பிறகு வீட்டில் ஓய்வெடுத்துவரும் திலீப் குமாரை, ஷாருக் கான் நேற்று சந்தித்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது ஷூட்டிங்கில் ஷாருக் பிஸியாக இருந்ததால், அவரால் சந்திக்க முடியவில்லை. 
 
நேற்று ஆனந்த் எல். ராயின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, மாலை நேரத்தில் தன் மகளுடன் திலீப் குமார் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்துள்ளார் ஷாருக் கான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்