ரஜினியை கிண்டல் செய்த 'கோமாளி': தயாரிப்பாளருக்கு கமல் கண்டனம்

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (18:16 IST)
ஜெயம்ரவி நடித்துள்ள 'கோமாளி' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இந்த டிரைலரில் ரஜினியை கிண்டல் செய்வது போல் ஒரு காட்சி இருப்பதை கமல் கண்டித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
'கோமாளி' படத்தின் டிரெய்லரில் கடந்த 20 வருடங்களாக ரஜினிகாந்த் அரசியலில் வருவதாக கூறி ஏமாற்றிக் கொண்டிருப்பது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், கமல்ஹாசன் கோமாளி படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார் 
 
இந்த ட்ரைலரை பார்த்த கமலஹாசன் அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்க்கு போன் செய்து தனது அதிருப்தியை தெரிவித்ததாக மக்கள் நீதி மையத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 'நம்மவர் இன்று காலை கோமாளி டிரெய்லரை பார்த்தார். அதில் ரஜினி அரசியலுக்கு அதைப் பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். நட்பின் வெளிப்பாடாக? நியாயட்தின் குரலா? என்று அந்த டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார் 
 
ரஜினி கமல் ஆகிய இருவருக்கும் 'கோமாளி' படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நெருக்கமானவர் என்பதால் கமல்ஹாசனின் கண்டனத்தை அடுத்து இந்த காட்சியை படத்திலிருந்து நீக்க ஐசரி கணேஷ் கூறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்