காலில் விழுந்த சரவணனை தட்டிவிட்ட சேரன் - வம்பாடுபடும் கமல்!

சனி, 3 ஆகஸ்ட் 2019 (18:42 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் சேரனுக்கும் சரவணனுக்கு நடந்த பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது போன்று தெரிகிறது. 


 
"நான் ஹீரோவாக இருந்தபோது நீ அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்தவன் தானே" என்று சேரனை மிகவும் ஏளனமாக பேசிய சரவணனை கமல் தட்டி கேட்கிறார். பின்னர் சரவணன் சேரனிடம் சென்று தயவு செய்து என்னை மன்னிச்சுடுங்கன்னே என்று கூறிக்கொண்டே காலில் விழ உடனே சேரன் அவரை தடுத்து நிறுத்துகிறார். 
 
இந்த வீடியோவை பார்க்கும்போது ஒழுவழியாக சேரன் சரவணனின் சண்டை ஓய்ந்துவிட்டது என்பது மட்டும் தெரிகிறது. அடுத்ததாக நிச்சயம்  கவின் , லொஸ்லியா சாக்ஷி பக்கம் திரும்பி முக்கோண காதலுக்கு கமல் முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்