’கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? ‘ஆர்.ஆர்.ஆர்’ சாதனை முறியடிக்கப்பட்டதா?

Siva
வெள்ளி, 28 ஜூன் 2024 (08:22 IST)
பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 
 
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ’கல்கி 2898 ஏடி’திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த படம் முதல் நாளே 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 600 கோடி என்று கூறப்படும் நிலையில் இதே போல் இன்னும் மூன்று நாட்கள் வசூல் செய்தால் மட்டுமே முதலீட்டு பணத்தை எடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ’கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பல முன்னணி நடிகர்கள் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. குறிப்பாக ’கேஜிஎப் 2’ ’சலார்’ ‘ஜவான்’ ஆகிய படங்களை வசூலை முறியடித்துள்ளதாக தெரிகிறது 
 
ஆனால் ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளில் 223 கோடி ரூபாயும், பாகுபலி 2 முதல் நாளில் 217 கோடி ரூபாயும் வசூல் செய்த நிலையில் இந்த இரண்டு படங்களின் சாதனையை மட்டும் ’கல்கி 2898 ஏடி’ படத்தால் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்