கல்கி படத்தின் ஓடிடி உரிமை இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதா?

vinoth

வெள்ளி, 28 ஜூன் 2024 (07:40 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பல முன்னணி நடிகர்கள் கோமியோ ரோலில் நடித்துள்ளனர். துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, நானி, ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருனாள் தாக்கூர் ஆகியோரின் கேமியோ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஆனாலும் படத்துக்குக் கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.

ஆனாலும் இந்த படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் 200 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்