"கல்கி 2898 AD" திரை விமர்சனம்!

J.Durai
வெள்ளி, 28 ஜூன் 2024 (10:43 IST)
வைஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் சி. அஸ்வினிதத் தயாரித்து நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்"கல்கி 2898 AD"
 
இத்திரைப்படத்தில் பிரபாஸ்,அமிதாப் பச்சன்,கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா,பசுபதி, பிரம்மானந்தம் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
மகாபாரத கதையில் வரும்  அஸ்வத்தாம கதாப்பாத்திரம் தான்  இப் பட கதையின் தொடக்க புள்ளி.
 
கிருஷ்ணரின் சாபத்தால் பல ஆயிரம் ஆண்டுகள் மரணம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அஸ்வத்தாம, ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவை காப்பாற்ற போராடும் கதை தான் இப்படத்தின் முதல் பாகம். 
 
பிரபாஸ் திரையில் தோன்றும் காட்சிகள் முதல்  கிளைமாக்ஸ் வரை சிறப்பு அது மட்டுமில்லாமல்  ஆக்க்ஷன் காட்சிகள் CG VFX அசத்தல் 
 
அர்ஜுனன் காண்டீபத்தை ஏந்தி அஸ்வத்தாமவை கொல்ல முயற்சி செய்யும் போது, நான்கு குதிரைகள் பூட்டிய ரதத்தில் தாண்டி வந்து அர்ஜுனன் ரதத்தை தாக்கும் போது, கிருஷ்ணர் - நான் உன் கூடவே இருக்கும் போது ரதம் இரண்டு அடி பின்னால் செல்கிறது என்றால் எதிரில் நிற்பது யார் என்று திரையில் வரும் காட்சிகள் வேற லெவல்
 
அமிதாப்பச்சன்  தோன்றும்  ஆக்க்ஷன் காட்சிகள் மாஸ் படத்தின் கதாநாயகனே அவர் தான் என்று தான் கூற முடியும்.
 
தீபிகா, துல்கர் சல்மான், ராஜமெளலி,பசுபதி, ஷோபனா,அன்னா பென், ஆகியோர்களது கதாபாத்திர  நடிப்பு ம படத்திற்கு கூடுதல் பலம்.
 
படத்தில் நடித்த அனைத்து  கதாபாத்திரங்களும் இப்படத்தின் மூலம் நிச்சயம் பேசபடுவார்கள்.
 
சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் பின்னனி இசை அட்டகாசம். 
 
ஒளிப்பதிவு  மற்றும் கலை இயக்குனரின் உழைப்பு படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
 
அறிவியல் மற்றும் புராண கதைகளை ஒன்றினைத்து உருவாக்கியுள்ளார்
இயக்குனர் நாக் அஸ்வின்.
 
தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்  சென்று விட்டார் இயக்குனர்
 
 மொத்தத்தில் தொழில் நுட்பத்தில் ஆங்கில படத்திற்கு இணையானது "கல்கி 2898 AD"

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்