காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள அவள் பெயர் ரஜ்னி படத்தின் டீசர் வெளியீடு!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (14:50 IST)
நடிகர் ஜெயராமின் மகன் தமிழில் ஒரு பக்கக் கதை மற்றும் தங்கம் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். அவர் நடித்த பாவக்கதைகள் மற்றும் விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள் பெரிய அங்கிகாரத்தை பெற்றுத் தந்தன.

இந்நிலையில் இப்போது அவர் நடிக்கும் ‘அவள் பெயர் ரஜ்னி ‘படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  இந்த படத்தில் அவரோடு, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகிய முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வினீஸ் ஸ்கரியா வர்கீஸ் இயக்கியுள்ளார்.

ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்