விஷாலுக்கு எதிராக களமிறங்கிய தாணு

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (13:39 IST)
நடிகர் சங்கம் குறித்து விஷால் அவதூறாக பேசியதாக கூறி எஸ்.தாணு தலைமையில் தயாரிப்பாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 

 
தயாளிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை அவதூறாக பேசியதாக கலைப்புலி எஸ்.தாணு குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே விஷால் தயாரிப்பாளர் சங்கம் பற்றி தவறாக பேசியதாக சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின் அவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.
 
இந்நிலையில் தற்போது விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை அவதூறாக பேசியதாக கூறி கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் தயாரிப்பாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாசர் விஷாலை விட்டு விலக வேண்டும் என தாணு கூறியுள்ளார்.
 
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில் தாணு விஷாலுக்கு எதிராக களமிறங்கியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்