காலா படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (18:36 IST)
ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 
சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் காலா படத்தின் தலைப்பும், கதையும் என்னுடையது என்றும், அந்த கதைக்கு ரஞ்சித் மறுவடிவம் கொடுத்து எடுத்தால், காலா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தார். 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, படத்தின் கதை திருடப்படத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் காலா படம் திட்டமிட்டபடி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்