உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ அமைப்பினர், விவாசாயிகள் என அனைத்து தரப்பினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.