தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக பல படங்களை கைவசம் வைத்திருந்தவர் காஜல் அகர்வால். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கடுமையான காய்ச்சல் காரணமாக 3 மாதம் ஓய்வில் இருந்ததார்.
எனவே, புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்துள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை மட்டுமே முடித்துக் கொடுத்துள்ளார். புதிய வருடத்தில் ஜனவரி முதல் புதிய படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள காஜல் அகவர்வால் முடிவு செய்துள்ளாராம்.
தெலுங்கில் இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கும் காஜல் அகர்வாலை, தமிழில் ஒரு படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஹீராவுடன் டூயட் பாடுவது போன்ற ஒரே மாதிரியான கதையில் நடித்து போர் அடித்து விட்டதாக கூறும் காஜல், இனி வித்தியாசமான கதையிலும், காதாபத்திரங்களிலும் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
நயன்தாரா, சமந்தா இருவருமே ஸோலோ ஹீரோயின்களாக கொடிகட்டி பறக்கும் நிலையில் அதே போன்ற ஆசை காஜர் அகர்வாலுக்கும் வந்திருப்பதில் அச்சரியமில்லை என்கிறார்கள் கோலிவுட்டில். அதற்கு ஏற்ற மாதிரிதான் ரமேஸ் அரவிந்த் இயக்கத்தில் பாரிஸ் பாரிஸ் படத்தில் காஜல் அகர்வால் நடித்துவருகிறார்.