அ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (11:47 IST)
தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் இயக்குநர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பனை செய்பவராக நடித்த்ததால் அவரை எல்லோரும் கஞ்சா கருப்பு என அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவரது பெயர் கருப்பு ராஜா.
 
கஞ்சா கருப்பு பிதாமகன் படத்துக்கு பிறகு ராம், சிவகாசி, அறை எண் 305ல் கடவுள், வேங்கை களவாணி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் புகழ் பெற்றார், இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு அ.தி.மு.க.வில் தன்னை இன்று இணைத்து கொண்டார்.
 
இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியை அவரது வீட்டில் நடிகர் கஞ்சா கருப்பு சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்