22 ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம் இந்தியன். இந்தியன் தாத்தா ரோலில் வந்த கமல், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கொலை செய்வார். இந்த படம் மெஹா ஹிட்டானது. தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படங்களில் இந்தியன் படமும் ஒன்று.
விபத்தில் அவர் இறந்துவிட்டதாக போலீஸ் கருதுவதுபோன்றும், ஆனால் வெளிநாட்டில் அவர் இருப்பது போன்றும் முதல் பாகம் படத்தை முடித்து இருந்தனர். இரண்டாம் பாகத்திலும் முதியவர் வேடத்துக்கு முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை உருவாக்கி உள்ளார்.
வருகிற 14-ந் தேதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். பொள்ளாச்சியிலும் பெரும்பகுதி படப்பிடிப்பு நடக்கிறது. அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. கடந்த இந்தியன் படம் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு எதிரான படமாக இருந்தது. இந்தியன் இரண்டாம் பாகம் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கமல் ஏற்கனவே இந்தியன் இரண்டாம் பாகம் முழு அரசியல் படம் என்று கூறியிருந்தார்.