கோடிகளை கை கழுவி; லட்சத்தில்... அடக்கி வாசிக்கும் காஜல்!!

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (18:01 IST)
நடிகை காஜல் அகர்வால் சம்பள விஷயத்தில் கறார் காட்டாமல் குறைவான சம்பத்தை வாங்கிக்கொண்டு பாலிவுட் படத்தில் நடித்து கொடுத்துள்ளாராம். 
 
தமிழ், தெலுங்கு என இரு திரைத்துறைகளிலும் நல்ல மார்க்கெட் பெற்றுள்ள காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
காஜல் எந்த படத்தில் ஒப்பந்தமானாலும், ரூ.1.75 கோடியை சம்பளமாக பெறுவார். இதனோடு மற்ற செலவுகளை சேர்ந்த்து ரவுண்டாக ரூ.2 கோடி வாங்குவாராம். அப்படி இருக்க ரூ.30 லட்சத்தை சம்பளமாக பெற்று நடித்து கொடுத்துள்ளாராம். 
 
ஆம், காஜல் அகர்வால் இந்தியில் மும்பை சாகா திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வாலுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே சம்பளம் கொடுத்ததாக தகவல்கள் வெளிவருகின்றன. 
 
ஒருவேளை ஹிந்தியில் தனது மார்க்கெட் வளரட்டும் பின்னர் சம்பளம் வங்குவோம் என்று கணக்குப்போட்டுள்ளாரா என்பது காஜலுக்கே வெளிச்சம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்