தயாரிப்பாளர் லலித் மகன் அக்‌ஷய் கதாநாயகனாக நடிக்கும் ‘சிறை’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

vinoth

சனி, 9 ஆகஸ்ட் 2025 (14:49 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித். அவர் தன்னுடைய நிறுவனம் சார்பில், அசுரவதம், குரு, சர்பத், துக்ளக் தர்பார், மகான், காத்துவாக்குல் ரெண்டு காதல், மாஸ்டர் மற்றும் லியோ உள்ளிட்ட பல்வேறு  படங்களை தயாரித்துள்ளார்.

விஜய்க்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கும் லலித், அடுத்து தன்னுடைய மகன் அக்‌ஷய் குமாரைக் கதாநாயகனாக ஆக்கியுள்ளார். இந்த படத்துக்கான கதையை  ‘டாணாக்காரன்’ இயக்குனர் தமிழ் எழுத வெற்றிமாறனின் இணை இயக்குனராக சுரேஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. விக்ரம் பிரபு போலீஸ் தோற்றத்திலும் அக்‌ஷய் கைதி தோற்றத்திலும் நீதிமன்ற வளாகத்தில் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மைனா படம் போல ஒரு போலீஸ் அதிகாரிக்கும், அவரால் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் கைதிக்கும் இடையிலான உணர்ச்சிப்பூர்வமான கதையாக ‘சிறை’ படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்