நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினி காலில் விழுந்து வணங்கிய போது, "வீட்டுக்குப் போனால் நானும் உன் காலில் விழ வேண்டும்" என்று நகைச்சுவையாக சொன்ன வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் இணைந்து பூஜைகளில் கலந்துகொண்டார். பூஜை முடிந்ததும், ஷாலினி தனது கணவர் அஜித்குமாரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அஜித் தடுத்தும் அவர் அதை செய்தார்.
ஷாலினி இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "என் இதயத்தை உருக்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ அஜித் மற்றும் ஷாலினி ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, பொதுவான சமூக வலைதளப் பயனர்கள் மத்தியிலும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.