ஸ்டண்ட் இரட்டையர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

vinoth

சனி, 8 பிப்ரவரி 2025 (11:57 IST)
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களாக இருப்பவர்கள் இரட்டையர்கள் அன்பறிவ். அவர்கள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படத்தில் இருந்து அவர்கள் வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அதன் பின்னர் அவர்கள் இயக்கும் புதிய படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த படமும் கைவிடப்பட்டது. இதையடுத்து அவர்கள் இப்போது கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளனர். இந்த படத்துக்காக அமெரிக்காவில் கமல்ஹாசனோடு இணைந்து சில மாதங்கள் திரைக்கதை எழுதி முடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்துக்குப் பிறகு அவர்கள் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்