சுதந்திர தினத்துக்கு ரிலீஸாகும் ‘காலா’?

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (19:07 IST)
ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம், சுதந்திர தின விடுமுறையில் ரிலீஸாகலாம் என்கிறார்கள்.

 
ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப்படம், ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடியாததால், ஜனவரியில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இதனால், ஏப்ரல் மாதம் ரிலீஸாக இருந்த ரஜினியின் இன்னொரு படமான ‘காலா’வின் ரிலீஸும் தள்ளிப் போகிறது. அனேகமாக, சுதந்திர விடுமுறையை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி புதன்கிழமை ‘காலா’ படம் ரிலீஸாகும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 
‘காலா’ படத்தை, பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டில், சமுத்திரக்கனி, சுகன்யா, ஈஸ்வரி ராவ், சாயாஜி ஷிண்டே, சம்பத், பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தனுஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்