நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர்களின் பட்டியலில் கே எஸ் ரவிக்குமாரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாம்.
அண்ணாத்த வெற்றியா தோல்வியா என்றே தெரியாத நிலையில் ரஜினி இப்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்க ஆரம்பித்துவிட்டார். இந்த படத்தை இயக்கப் போவது யார் என்று இதுவரை தெரியவில்லை. பட்டியலில் தேசிங் பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பாண்டிராஜ் ஆகியவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
இந்நிலையில் இப்போது திடீரென இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. இதற்காக கே எஸ் ரவிக்குமார் தன்னுடைய கதை விவாத குழுவோடு கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம். அதனால் அடுத்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.